பக்கங்கள்

வியாழன், 19 மே, 2022

Periyar's texts in Norway!

 நார்வே நாட்டில் பெரியாரின் நூல்கள்!

நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் எழுத்தாளர் ரூபன் சிவராஜா அவர்களின் `அதிகார நலனும் அரசியல் நகர்வும்` -`எழுதிக் கடக்கின்ற தூரம்` - `கலைப்பேச்சு` - மூன்று நூல்கள் அறிமுக விழா` ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் நடந்தேறியது.

அவ்விழா அரங்கில் அமைக்கப்பட்டிருந்த நார்வே-தமிழ் புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. பெரும்பான்மையாக ஈழத் தமிழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், தந்தை பெரியாரின் நூல்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்ததென குறிப்பாக, நார்வே நாட்டிலேயே பிறந்து வளர்ந்த இளம் தோழர்கள் பலரும் பெரியார் களஞ்சியத்தை வாங்கிச் சென்றதாகவும் அய்ரோப்பிய  பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முனைவர் விஜய் அசோகன் தெரிவித்தார்.  மேலும், எழுத்தாளர் ரூபன் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர் என்றும் இந்த நிகழ்வில் கூட ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலினை வருகைத் தந்திருந்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கி இளைஞர்கள் மத்தியில் பெரியாரின் சிந்தனைகளை விதைக்கும் நன்னெறியினைத் தொடங்கியிருக்கிறார்” என்றும் முனைவர் விஜய் அசோகன் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் ரூபன் அவர்களின் நூல் ஒன்றில் வெளியாகி இருக்கும் அவரது கவிதைகளில் ஒன்று, “இந்த லட்சணத்தில் எல்லாம் வல்ல” - என்பது இறைவனை கேள்விக் கேட்பதோடன்று, மாந்தநேயத்தையும் அன்பையும் விதைக்கும் கருத்தோடு எழுத்தப்பட்டுள்ளது, தந்தைப் பெரியாரின் பார்வையை சரியாக விதைத்திருப்பதாக, நூலினை விமர்சித்துப் பேசிய பலரும் தெரிவித்திருந்தனர்.

எழுத்தாளர் ரூபன் சிவராஜா, சிறு வயதிலேயே நார்வே நாட்டிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிற பொழுதிலும் இன்று ஒரு எழுத்தாளராக, கவிஞராக, நடிகராக, நெறியாளராக, ஊடகவிய லாளராக, மொழிபெயர்ப்பாளராக, நூல் தொகுப்பாளராக பல பரி மாணத்தில் தனது ஆளுமையினை வெளிப்படுத்தி நிற்கிறார் என நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக