பக்கங்கள்

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

வெளிமாநிலங்களிலும் வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் விழாக்கள்!

சென்னை, செப்.21 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2017) மகாராட்டிரா, கருநாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.9.2017 அன்று இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவரம் வருமாறு:

மும்பை



தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2017 அன்று மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி - கலைஞர் மாளிகையில் மாலை 7.30 மணிக்கு சிறப்புடன் தொடங்கியது.

விழாவுக்கு மும்பை தி.க. தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை தி.க. செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக் கூறி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மும்பை ப.க. தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றி, விழாவை ஒருங்கிணைத்தார்.

அய்யா உருவப் படத்திற்கு விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாத் தலைவர் உரைக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளை செயலாளர் ஞான.அய்யாபிள்ளை, சுங்கத் துறை அதிகாரி பொ.அன்பழகன், புறநகர் தி.மு.க. இலக்கிய அணியின் செயலாளர் இரா.வ.தமிழ்நேசன், தமிழ் ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இரவிரஜினி, புறநகர் தி.மு.க. பகுத்தறிவு அணி பொறுப்பாளர் நெல்லை பைந்தமிழ், ஜெய்பீம் அறக்கட்டளை நிர்வாகி இராஜாகுட்டி, விழித்தெழுக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சிறீதர் தமிழன், ஈஸ்வரி தங்கப்பாண்டியன், மும்பை தி.க. பொருளாளர் அ.கண்ணன், லெமூரியா அறக்கட்டளை சார்பில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் நினைவாக வழங்கப்படும் பெரியார் விருது பெற்ற மாணவிகள் அமிசா, அமராவதி ஆகியோர் அய்யாவைப்பற்றி சிறப்பாக உரையாற்றினர்.

தொடர்ந்து மும்பை மாநகரப் பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீராமீரான், தமிழ் லெமூரியா இதழாசிரியர் சு.குமணராசன் ஆகியோர் தந்தை பெரியாரின் அரிய கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கழகத் தோழர்கள் செ.ரோபின் நன்றி கூறினார்.

விழாவில், சோ.ஆசைத்தம்பி, சோ.சவுந்திரபாண்டியன், மும்பை கழகத் துணைச் செயலாளர் ஜெ.வில்சன், அ.இராதாகிருட்டிணன், சா.பொன்னம்பலம், அய்.செல் வராஜ், அணுசக்தி நகர் தமிழ் மன்றச் செயலாளர் பு.தேவராசன், இரா.தங்கப்பாண்டியன், மு.கணேசன், கே.இராசன், க.கவுதமன், க.மலர், க.உமா, இரா.சொர்ணம், செல்வி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு, சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தலைமை நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த அய்யா பிறந்த நாள் சுவரொட்டிகள் மும்பை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டன.

பெங்களூரு



பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் திராவிடர் அகத்தில் 17.9.2017 காலை 10.30 மணியளவில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், தமிழகத்தின் விடிவெள்ளி அறிஞர் அண்ணாவின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ கழகத் தோழர்கள் அனைவரையும் வரவேற்றும், இணைப்புரையும் ஆற்றினார். கருநாடக மாநிலத் தலைவர் மு.சானகிராமன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

எழுச்சிமிகு கழகக் கொடியை பெரியார் நகர் பகுதி தலைவர் பெ.பாண்டியன் பலத்த கரவொலிக்கிடையே உயர்த்தி வைத்தார். தந்தை பெரியார் படத்தினை ஓசூர் சி.தேவனும், அறிஞர் அண்ணாவின் படத்தினை கவிஞர் வீ.இரத்தினாவும் திறந்து வைத்தனர்.

மறைந்த மாணவி அனிதாவின் படத்தினை பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராமும், மறைந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தினை ஆ.வந்தியத்தேவனும் திறந்து வைத்தனர்.

மறைவெய்திய அனிதா, இதழாளர் கவுரி லங்கேஷ், வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஜெ.அருண்கதிரவனின் சிறிய மாமியார் வரலட்சுமி ஆகியோர்களுக்கு இரு நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று அமைதி மரியாதை செலுத்தினர்.

தோழர் நரசிம்மமூர்த்தி, ஆ.வந்தியத்தேவன் ஆகி யோருக்கு தங்கம் இராமச்சந்திரா அறக்கட்டளையின் சார்பில் பயனாடைகளையும், பரிசுப் பொருள்களையும் வழங்கி மகிழ்வுபடுத்தினர்.

பெரியார் பிஞ்சு இராவணன் உள்ளிட்ட மழலை யர்களுக்குப் பேனா வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தந்தை பெரியார் பேசிய பேச்சினை 1984 இல் திராவிடர் கழகம் வெளியிட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு நீட் தேர்வினை எதிர்த்து பெரியாரின் முதுபெரும் தொண்டர் முத்துசெல்வன் நெடிய உரையாற்றினார்.

இறுதியாக, மறுமலர்ச்சி தி.மு.க. வெளியீட்டு செய லாளர் ஆ.வந்தியத்தேவனுக்கு, மாநில தி.க. தலைவர் மு.சானகிராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து உரையாற்ற அழைத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மறைந்த அனிதா, பகுத்தறிவு நெறி இதழாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரைப்பற்றி  நெடியதொரு உரை நிகழ்த்தினார்.

மாநில துணைச் செயலாளர் வே.நடராசன் எழுச்சிமிக்க நன்றியுரை நிகழ்த்தினார்.

மூத்த உறுப்பினர் வாசுதேவன் பகுத்தறிவு நூல்களை அனைவருக்கும் வழங்கினார்.

இறுதியாக, பெரியாரின் பிறந்த நாளினை மகிழ்வுடன் நினைவுகூறும் வண்ணம் மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி - செயலட்சுமி இணையர் வந்திருந்த அனை வருக்கும் புலால் உணவு வழங்கி சிறப்பித்தனர். முத்துமணி, வினோத் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கேரளா



கேரள மாநிலம் சேர்தலா அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் பொறியாளர்கள் இரா.சு.பாஸ்கர், மனோரஞ்சித், மணிகண்டன், சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோர் 17.9.2017 அன்று வைக்கம் தந்தை பெரியார் நினைவகம் சென்று, அய்யாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வு முடிந்ததும், கலந்துகொண்ட நண்பர்களுக்கு அசைவ விருந்து அளித்து தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு இனிதே கொண்டாடப்பட்டது...

-விடுதலை,21.9.17

அமெரிக்கா வாசிங்டன் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகல விழா




வாசிங்டன், செப்.20 அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில்,- வாசிங்டன் வட்டாரத்தில் 17.9.2017அன்று தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது! தமிழகத்தில் இருந்து விழாவிற்கு வந்திருந்த கவிஞர் நந்தலாலா மிக அருமையாக, ‘‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’’ என்ற தலைப்பில் பேசினார். - பெரியார், அண்ணா, காமராசர், எம்.ஆர்.ராதாபற்றி ஏராளமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்!

ஜெர்மனியில் சென்ற மாதம் நடைபெற்ற பன்னாட்டு மய்ய பெரியார் விழாப் பற்றி மருத்துவர் சோம.இளங்கோவன் பேசினார்!

நீட் ஏன் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை, அது சமூக நீதிக்கு எதிரானது என்பதை முனைவர் சங்கர பாண்டி விளக்கினார்!

‘‘பெரியாரின் தனித்தன்மை, சமூக மாற்றம்’’பற்றி நியுசெர்சி வழக்குரைஞர் கனிமொழி -தனது எழுச்சிமிக்கப் பேச்சால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்! ‘‘பெரியாருக்கு நன்றி கடன்’’ என்ற தலைப்பில் முனைவர் ஜெயந்தி சங்கரபாண்டி பேசினார்! ‘‘பெரியாரின் அறிவும் மானமும்’’ என்ற தலைப்பில் பெங்களூர் குமரன் பேசினார்! 
‘‘சமத்துவம்’’ என்ற தலைப்பில் கிளாரா பீட்டர் பேசினார்! ‘‘பெரியாரின் வாழ்க்கை இணையர் அன்னை நாகம்மையார்’’பற்றி நல்ல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார் மருத்துவர் சரோஜா இளங்கோவன்.

தந்தை பெரியார் சாதி ஒழிப்பு பற்றி பேசியதை, அப் படியே சிறப்பு நடிப்பாக நடித்து காண்பித்தார் மருத்துவர் சோம. இளங்கோவன்.

தோழர் சிவா பாபா சாகேப்பின் ஜாதி அழிக்கப்பட வேண்டும் கட்டுரையின் முக்கிய வார்த்தைகளைப் படித் தார். விழாவை தொகுத்து வழங்கினார் சுந்தர் குப்புசாமி. - இடை இடையே பெரியாரின் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்!  வருடா வருடம் நடக்கும் பெரியார் விழாவை இன்னும் சிறப்பாக,- எண்ணற்ற இளைஞர்களை உள் ளடக்கி மேலும் எப்படி இதனை நடத்தலாம் என்ற கலந்து ரையாடலை பேரவை முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர் பகிர்ந்து கொண்டார்!

வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜாராம் கலந்து கொண்டு - அடுத்த ஆண்டு சிறப்பு கூட்டத்திற்கும் அவரின் உதவி உண்டு என்று சொன்னார்! பெரியாரின் பிறந்த நாள் விழாவிற்கு வெர்ஜினியா, மேரிலாந்து, நியுசெர்சி, பென்சில் வேனியா மாநிலங்களில் இருந்து வந்த தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டார்கள்!

கலிபோர்னியாவில் பெரியார் விழா சிறப்பாக நடந்தது.  இன்னும் நியூஜெர்சி, சிகாகோ, கன்னெக்டிகட் போன்ற இடங்களில் நடக்க இருக்கின்றது.

நாள்: 23.7.2017, இடம்: சாம்பர்க்கு பொது நூலகம், 130, இரோசல் சாலை, சாம்பர்க்கு. 2 ஆவது மாடி கூட்ட அறை. நேரம்: பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை.

சிங்கப்பூர்

செப்டம்பர் 17 அன்று சிங்கப்பூர் சையத் ஆல்வி சாலையில்  உள்ள ஆனந்தபவன் உணவகத்தின் இரண் டாவது தளத்தில் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை பெரியார்பிறந்த நாள் விழா மாணவர்கள் பங்குபெற்ற பட்டிமன்றமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந் தினராக சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தமிழ்த்துறை உதவி இயக்குநர் த.வேணுகோபால் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றிய மன்றத்தின் செயலாளர் க.பூபாலன்; பெரியார் அவர்கள் வாழும்போதே அவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாட தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் மட்டு மல்லாமல் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடி வருகிறார்கள். அந்தப் பெருமை தந்தை பெரியார் ஒருவருக்கு மட்டும்தான், மேலும் சிங்கப்பூரில் பெரியாரின் 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ள செய்தி சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது என்று கூறினார்.

‘‘பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயர வில்லை!’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மாணவர்கள் இருஅணியாக பிரிந்து சிறப்பாகப் பேசினார்கள். பெண்கள் கல்வி பெறவேண்டும், ஆண் பெண் சம உரிமை, விதவை மறுமணம், தாலி அடிமை சின்னம், கலப்பு மணம்  போன்ற பல பெண் உரிமைக்கான பெரியாரின் கருத்துகளை இரு அணியையும் சேர்ந்த 8 மாணவர்களும் தங்களின் விவாதத்தில் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர் த.வேணுகோபால் அவர்கள் பேசும்போது மாணவர்களின் தமிழ் சொல்லாட்சியை பார்க்கும்போது இனிவரும் காலங்களில் சிங்கப்பூரில் தமிழ் செழித்தோங்கும் என்ற நம்பிக்கையுள்ளது. தந்தை பெரியார் அவர்களை அடிக்கடி நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் சமூகஅநீதியை தட்டிக்கேட்டு தனி ஒரு மனிதராக ஒரு பெரிய போராளியாக உருவாகியவர். அவர் எழுப்பிய புரட்சிக் குரல் பலரையும் தட்டி எழுப்பி இருக்கிறது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த அநீதியை எதிர்த்து போராடியவர் பெரியார். கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனை இன்று நிறைவேறி இருக்கிறது.   சுயமரியாதை இயக்கம் என்று பெரியார் தொடங்கக் காரணம் யாரும் உங்கள் உரிமையை நீங்கள் விரும்பாமல் தட்டிப் பறித்து விடமுடியாது. அதனால் சுயமரியாதை உணர்வு உங்களுக்கே வரவேண்டும். குறிப்பாக பெண் களுக்கு வரவேண்டும், உங்கள் உரிமையை நீங்களே நிலை நாட்ட வேண்டும் அதை ஆண்கள் தருவார்கள் என்று எப்போதுமே எதிர்ப்பார்க்காதீர்கள் என்று கூறினார்.

விழாவின் தலைமை உரையாற்றிய மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் பேசும்போதுமானமும் அறி வும் மனிதனுக்குஅழகு என்ற பெரியாரின் பொன்மொழி எனக்கு பிடித்தமானது, அதன் பொருள் எவ்வளவு ஆழமானது என்பதைப்பற்றிப் பேசினார்.

மேலும் அமெரிக்காவில் அவர் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தபோது அவருக்குத் தமிழ்மொழி பழக்கத்தில் இருக்க தொடர்ந்து பேசி பயிற்சி எடுத்ததை நினைவு கூர்ந்தார்.   விழாவை பூபாலன் மன்ற உறுப்பி னர்களின் ஆதரவுடன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இறுதியாக அனைவருக்கும்  சவுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி மதிய விருந்துடன் நிறைவுற்றது. நிகழ்ச்சி சிங்கப்பூரின் ‘‘ஏ.எம்.பி.எம். ப்ராப்பர்ட்டி கன்சல்ட்டன்ஸ்’’   மற்றும் ‘‘சிறீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உயர்ந்திருக்கிறார்கள்! என்ற அணியில் விஷ்ணுவர்தினி, முத்துக்குமார், வானதி புகழேந்தி அனிருத், ஆகிய மாணவர்களும். இன்னும் உயரவில்லை! என்ற அணியில் யுவராஜ், ரிஷி பால கிருஷ்ணன், கிருஷ்ணன் சுமன் வேணுகோபால் ரோஷினி, ஆகிய மாணவர்களும் பேசினார்கள்.

பட்டிமன்றத்தை நடுவர் பிமல்ராம் சிறப்பாக நடத்தினார். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் மூன்று பேரை தேர்வு செய்து அறிவித்தார். அவர்களுக்கான பரிசுகள் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள பெரியார் விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை த. வேணுகோபால் அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழர் பேரவையின் தலைவர் பாண்டியன், வளர்த்தமிழ் இயக்கத்தின் பொருளாளர் ஜோதி.மாணிக்கவாசகம், ஆசியன் கவிஞர் க.து.மு.இக்பால், சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் செயலவை உறுப்பினர் ஓய்வுபெற்ற ஆசிரியை வே.தமிழ்மணி, தமிழ் பட்டிமன்றக் கழகத்தின் தலைவர் இரஜித், சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் ஆசிரியர் பாலு மணிமாறன், பெரியார் பெருந்தொண்டர்கள் ஆருர் சபாபதி, இராமசாமி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் பிரிவின் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மன்றத்தின் புரவலர் புதுமைத்தேனி மா.அன்பழகன், மூத்த விரிவுரையாளர் ச.ரத்னக்குமார், எம்.இலியாஸ், பொருளாளர் நா.மாறன், இராஜராஜன், ராமன், திருமதி மலையரசி, திருமதி.தமிழ்ச்செல்வி, திருமதி. கவிதாமாறன், பழனி, சவுந்தர், திருமதி.கவுரி , திருமதி.பர்வீன்பானு, பெரியார் பிஞ்சு ஆதவன், இனியநிலா, கல்லூரி மாணவர்கள் குந்தவி, வளவன், ராஜராஜன் ராஜமகேந்திரன். தோழர்கள் செந்துறை மதியழகன், சேதுஜகதீசன், அறிவரசு. தமிழ்கரிகாலன், ஜகன்தங்கதுரை, நரசிம்மன், கார்த்திக் ராமசாமி, கதிராமங்கலம் கலியபெருமாள், கஸ்தூரிபாய் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தார்கள்.

-விடுதலை,20.9.17

அமெரிக்கா - மிச்சிகனில் உலகத் தலைவர் பெரியார் பிறந்தநாள் விழா

மிச்சிகன், செப்.22 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் -அமெரிக்கா சார்பாக அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஆபர்ன் ஹில்ஸ் நகரில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், மாண வர்கள், பெற்றோர்கள், பெரியாரியக் கருத்தியலில் ஆர்வமுடைய பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், பள்ளி மாணவ மாணவியர் 20 பேர் பங்குபெற்று, ‘யார் பெரியார்?’ ‘நான் பெரியார் பேசுகிறேன்!’ ‘பெரியாரின் சமூகப் புரட்சி’, ‘பெரியாரின் பெண்ணியம்’ ஆகிய தலைப்புகளில் பேசினர். பெரியாரின் முற்போக்கு கருத்துகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட உறுப்பினர்களால் இந்தப் போட்டி நடத்தப்பட்டது

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் பெரி யாரின் கருத்துகளை ஆழ்ந்து படிக்க ஓரு வாய்ப்பாக இந்தப் போட்டி அமைந்ததாகவும், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரியார் கருத்துகளின் தேவை இப்போது இருப்பதாகவும், இதுபோன்ற மேலும் பல நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் விழாவில் கலந்துகொண்ட பெற்றோர்கள் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்களை வலியுறுத்தினர்.

பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங் கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது

விழாவின் போது,

1) நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கவேண்டும்.

2) நவோதயா பள்ளிகளைத் திறக்கும் முயற்சியும், மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயல்களும் கைவிடப்படவேண்டும்.

3) கருத்துரிமை பாதுகாக்கப்படவேண்டும்.

4) விவசாயிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை,22.9.17

திங்கள், 24 ஜூலை, 2017

Periyar revolution-The Week, 22.3.1992,


The Tanjore experience of 1971-72 also brought home the point that political support can work wonders. In a bid to raise contraceptive acceptance and to popularise the small family norm, the district administration, with the help of the rural development and agriculture department, organised functions and colourful processions. In all these, the political leaders were in the forefront.


The state had infact benefited from an awareness movement set in motion by the social reformer Periyar Ramaswamy Naicker in the mid-20s. Shocking a caste-ridden society, which he revelled in doing, he had ridiculed the concept of a woman being just a child-bearing machine. He spoke powerfully for contraception, status of women and late marriage. Poet-patriot Bharatidasan at about the same time wrote poems on prevention of un-wanted pregnancies and the need to check population growth. This was long before family planning programmes were even thought of.

Rashmi Saksena, The Week, 22.3.1992,

தஞ்சாவூரில் 1971-1972 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அளவான குடும்பம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களால் மக்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஒரு அக்கறை ஏற்படத் துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை மற்றும் இதர துறையினரும் உள்ளூர்அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை பிரச்சாரமாக செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இது போன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால், தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நீண்ட காலத்திற்கு முன்பே மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது. சமூகப் புரட்சியாளரான பெரியார் ராமசாமி நாயக்கர் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர், இவர் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் சுதந்திரமே சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று உணர்ந்தவர். தன்னுடைய எழுத்துக்களில் பெண்கள் வெறும் குழந்தை பெறும் கருவியாக இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் பெண்கள் தங்களின் சமூக பொருளாதார நிலையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்றதுடன் திருமணம் குழந்தைபெறுவதை பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உறுதியுடன் கூறினார்.  

அதேபோல் பெரியார் வழிவந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய கவிதைகளில் மக்கள் தொகை அதிகரிக்கப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து எழுதிவந்தார். இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு 30 ஆண்டுகள் வரை மக்கள் தொகைப் பிரச்சினையை தீர்க்க தீர்வுகளைத் தேடிக்கொண்டு இருக்கும் போது தென் இந்தியாவில் நீண்டகாலத்திற்கு முன்பே மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்.   

இந்தியாவின் மக்கள் தொகை குறித்த பிரச்சாரம் தொடர்பாக ‘‘தி வீக்'' என்ற ஆங்கில நாளிதழில் அதன் பொறுப்பாசிரியர் ரேஷ்மி சக்சேனா மார்ச் 22, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தி வீக் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையின் ஒருபகுதியின் தமிழாக்கமே இது).

-விடுதலை,24.7.17,-viduthalai,24.7.17

செவ்வாய், 6 ஜூன், 2017

Those days of our youth-DRAVIDIAN KAZHAGAM PRESIDENT

Those days of our youth

My relationship with DMK president M Karunanidhi goes back 70 years, when we were students. During summer holidays we used to join Periyar’s training school in Erode and once, after a function, we stayed over at a member’s house in a village near Thiruthuraipoondi, in undivided Thanjavur district. We were both tired but mosquitoes kept Karunanidhi awake, while I slept through it. Around 1am, he woke me up and said he wanted to leave for the next stop Thiruthuraipoondi.In the dead of the night, we found an open bullock cart and along with two others set off. We reached our friend’s house in Thiruthuraipoondi at 3am. But not wanting to wake him up, slept on the sitouts. In the morning when the householders found us on the sit-outs they were astonished. Another time he attended a Periyar conference near Trichy when he had small pox.

K Veeramani | DRAVIDIAN KAZHAGAM PRESIDENT

-viduthalai,3.6.17

கலைஞருடன் மாட்டுவண்டியில் கும்மிருட்டில் பயணம் திராவிடர் கழகத் தலைவர் தகவல்



கலைஞர் குறித்து நீளும் நினைவுகளை அவருக்கு நெருக்கமானவர்கள் பகிர்ந்து கொள்வதை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலைஞருடன் உள்ள இளமைக்கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்த இளமைக்காலங்களில்....

திமுக தலைவர் கலைஞருடனான நட்பில் நினைவலைகள் 70 ஆண்டுகள் பின்னால் செல்கின்றன.

கோடைக்கால விடுமுறை நாள்களில் தந்தை பெரியார் குருகுலமான ஈரோட்டில் இணைந்திருப்போம். ஒருமுறை நிகழ்ச்சி முடிந்தபின்னர் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தொண்டர் ஒருவரின் வீட்டில் தங்கினோம். நாங்கள் மிகவும் களைப்பாக இருந்தோம். கொசுக்கள் கலைஞரைத் தூங்க விடவில்லை. கொசுக்கடிக்கிடையே நான் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டேன். நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் அவர் என்னை எழுப்பினார். நிகழ்ச்சி நடக்கக்கூடிய அடுத்த இடமாகிய திருத்துறைப்பூண்டிக்கு போகலாம் என்றார்.மேலும்இருவருடன்சேர்ந்துகும் மிருட்டில்திறந்தமாட்டுவண்டியில்சென் றோம். அதிகாலை 3 மணியளவில் திருத் துறைப்பூண்டியில் உள்ள நண்பரின் வீட்டை அடைந்தோம்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நண்பரை எழுப்ப விரும்பாமல் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.

நாங்கள் திண்ணையிலேயே படுத்து தூங்கி யதை காலையில் எழுந்த அவ்வீட்டார் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திருத்துறைப்பூண்டியில்பெரியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அம்மை போட்ட நிலையிலேயே கலைஞர் கலந்துகொண்டார்.

இவ்வாறு இளமைக்கால நினைவு அலைகளை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி பகிர்ந்துகொண்டார்.

திங்கள், 13 மார்ச், 2017

சென்னை - பெரியார் திடலில், பகுத்தறிவாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் மாநில கலந்துரையாடல் கூட்டம் - முக்கிய முடிவுகள்!

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர்தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது (5.3.2017)

சென்னை, பெரியார் திடலில் 5.3.2017 அன்று பகுத்தறி வாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப்பாளர் களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாலை 5.15 மணிக் குத் தொடங்கி நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர்

கி.வீரமணி தலைமை வகித்தார்.

மாநிலம் முழுவதிலுமிருந்து பொறுப்பாளர்கள் மிக அதிக அளவில் கூட்டத்தில் பங்கேற்று, (ஏறக்குறைய 90 தோழர்கள்) உரையாடியது பகுத்தறிவாளர் கழக - பகுத்தறிவு ஆசிரியரணி செயல்பாட்டில் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களின் ஈடுபாட்டை, அக்கறையினைக் காட்டுவதாக இருந்தது.

ஒவ்வொரு மாவட்டப் பொறுப்பாளரும் கடந்த கால செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்கள் பற்றி மிகச் சுருக்க மாக எடுத்துரைத்தனர். பகுத்தறிவு ஆசிரியரணியின் பொறுப் பாளர்கள் தங்களது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து, அதன் நடைமுறைக் கான வழிமுறைகளையும் வழங்கினார்கள்.

பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர்

தமிழர் தலைவரின் வழி காட்டும் நெறியுரை

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தலைமை வகித்த கழகப் புரவலர் தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்ட தாவது:

பகுத்தறிவாளர் கழகம், இயக்கத்தின் பிரச்சாரப் பணியில் ஒரு தனித்துவமான தளத்தில்  செயல்படவேண்டுமென்ற சீரிய நோக்கத்தில் தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பாகும். அரசமைப்புச் சட்டத்தில், நெருக்கடி காலத் தில் (1976இல்) சேர்க்கப்பட்ட குடிமக்களின் அடிப்படைக் கட மைகளாக (திuஸீபீணீனீமீஸீtணீறீ ஸிவீரீலீts)  வலியுறுத்தப்பட்டவை களை தொலைநோக்கோடு 1971ஆம் ஆண்டிலேயே செயல் திட்டமாக - பரப்புரை பணியாகக் கொண்டு தந்தை பெரியார் பகுத்தறிவாளர் கழகத்தினை உருவாக்கினார். அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான விதி 51 கி(லீ) படி அறிவியல் மனப்பான்மையினை வளர்த்தல், ஏன் எதற்கு என வினா எழுப்பி வினையாற்றுதல், மனித நேயம் பேணுதல், சீர்திருத்தச் சிந்தனைகளை வளர்த்துப் பெருக்குதல் ஆகிய கடமைகளை நடைமுறைத் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமைப்பு பகுத்தறிவாளர் கழகம் ஆகும். குறிப்பாக பகுத்தறிவு ஆசிரியரணியின் பணிகள் இன்னும் சிறப்பானவை. குடிமக்களின் அடிப்படை கடமைகளை இளம் நெஞ்சங்களில் பதித்து வருங்காலத்தில் சமுதாயப் பொதுக் கடமை மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கிடும் பணியினைச் செய்து வருகிறார்கள்.

மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள், மனித ஆற் றலை, பொருளாதார நிலையினை சீரழித்து வரும் இன்றைய சூழலில், பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பரந்துபட்டு சுழன்று நடைபெற வேண்டும். ஒவ்வொரு பொறுப்பாளரும், தோழ ரும் ஒரு நடமாடும் பிரச்சாரக் கருவியாகவே தங்களைக் கருதி செயல்பட முன்வரவேண்டும். பிரச்சாரப் பொறியினைத் தட்டிவிட்டு, அதுகுறித்த சிந்தனையில் உள்ளோரை ஆழமாக கருத்துகளில் ஆட்படுத்த, இயக்க இதழ்களை அவர்கள் படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். தங்கள் பகுதியில் சிறு நூலகங்களை அமைத்து இயக்க ஏடுகளை வருவித்து பொதுமக்கள் படித்துப் பயன்பெறும் வகையில் செயல்படலாம். கருத்தரங்கங்கள் நடத்தி அறி வார்ந்த சிந்தனை வட்டத்தினை சிறிய அளவிலே உருவாக் கிட முன்வரலாம். பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஏதேனும் ஒரு அலுவலகப் பணியில் உள்ள நிலையில், திட்டமிட்டு - நேரம் ஒதுக்கி செறிவாகச் செயல்பட முன்வரவேண்டும்.

ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை சார்ந்த மத விழாக்களைப் பற்றிய அறிவியல் ஆதாரமற்ற, அர்த்தமற்ற போக்கினைக் குறித்து முன் திட்டத்துடன் பிரச்சாரம் செய்யலாம். அவை பற்றிய பிரசுரங் களை, தலைமையிடத்தில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களை பொது மக்களிடம் பரவலாக வழங்கலாம். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற நுண் பரப்புரை திட்டத்தை (விவீநீக்ஷீஷீ றிக்ஷீஷீஜீணீரீணீஸீபீணீ றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ) பொறுப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டு செயல்பட்டால் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு மேலும் செம்மைப்படும். பொறுப்பாளர்கள் இத்தகைய அணுகு முறையுடன் செயல்படும் வழக்கத்தை வாடிக்கையாக்க வேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சாரப் பணியில் எளிமையாக கருத்துகளை எடுத்துச் சொல்லும் வழிமுறைகளை விளக்கினார். ஒவ்வொரு பகுதி யிலும் அங்குள்ள தோழர்கள் ‘பகுத்தறிவுப் பலகை’யினை பொது இடத்தில் நிறுவி, நாள்தோறும் பொருத்தமான பகுத்தறிவுக் கருத்துகளை, தந்தை பெரியாரின் பொன்மொழி களை எழுதினால் அவை ஒரு பெரிய தாக்கத்தினை ஏற் படுத்தும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, செயல் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் - அண்ணா. சரவணன், கே.டி.சி.குருசாமி, கா.நல்லதம்பி, மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் மா.அழகிரி சாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.ரமேசு, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.

உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்: சு.திருமா வளவன் (திருநெல்வேலி), எஸ்.கரிகாலன் (திருவாரூர்), கோபு.பழனிவேல் (தஞ்சாவூர்), டி.இருதயராஜ் (கும்மிடிப்பூண்டி), தங்க.சிவமூர்த்தி (அரியலூர்), டாக்டர்  எஸ்.டி.இரத்தினசபாபதி (தென் சென்னை), வா.தமிழ்ப் பிரபாகரன் (ஆத்தூர்), சி.மெர்சி ஆஞ்சலாமேரி (பழனி), அ.சிவக்குமார் (செங்கல்பட்டு), மா.இராசய்யா (தென்காசி), உ.சிவதாணு (கன்னியாகுமரி), அ.சரவணன் (புதுக்கோட்டை), புயல் சு.குமார் (திருத்துறைப் பூண்டி), நெ.நடராசன் (புதுச்சேரி), ஆசிரியரணி சே.ஜானகி ராமன் (திருப்பத்தூர்), ஜி.எஸ்.எஸ்.நல்லசிவன் (ராச பாளை யம்), ச.வெங்கட்ராமன் (தூத்துக்குடி), இரா.இராமதுரை (ஆவடி), அ.சாமிதுரை (மயிலாடுதுறை), கோவி.அன்புமதி (மேட்டூர்), பேராசிரியர் ப.சம்பத் (நாமக்கல்), க.வெங்கடேசன் (திருப்பத்தூர்), கி.கார்வண்ணன் (விழுப்புரம்), ஆசிரியர் கி.எழில் (திருவள்ளூர்), கோ.பாலசுப்பிரமணியன் (லால்குடி), இரா.முத்துகிருட்டிணன் (நாகப்பட்டிணம்), அய்.லூயிஸ்ராஜ் (கிருட்டிணகிரி), மணிவண்ணன் (லால்குடி)

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர், கொடையாளர், பகுத்தறிவு பரப்பலுக்கும், பயிற்சி முகாமிற்கும் உற்ற துணையாக இருந்த, தமிழர் தலைவர் மேல் எந்நாளும் பாசம் கொண்டிருந்த அய்யா வி.கே.யென். கண்ணப்பன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

ள தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமெல்லாம் கொண்டு செல்லும் தமிழர் தலைவர், தந்தை பெரியாருக்குப் பின்னால், அன்னை மணியம்மையாருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தைக் கட்டிக்காப்பாற்றி வருகின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பரப்புரை பயண ஊர்தியினை வழங்கிட ஏற்பாடுகள் செய்த திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவரணிக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, முதன்முதலில் பரப்புரை பயண ஊர்திக்காக  நன்கொடைகளை அளித்து ஊக்கமூட்டிய பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றியை, பாராட்டை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

அ) ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் (ழிணிணிஜி) நுழைவுத்தேர்வுக்கு தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்கும் தமிழ் நாடு சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை உடனே வழங்க கேட்டுக்கொள்கிறது.

ஆ) மாவட்ட அளவில் , பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பாக புதிய கல்விக்கொள்கை எனும் பெயரில் வரும் குலக் கல்வித்திட்டத்தினை விளக்கி கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்படுகிறது.

ள பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவினை ஏப்ரல்-29 அல்லது அதனை ஒட்டி நடத்த முடிவு செய்யப்படுகிறது.

ள முகநூல் (திணீநீமீதீஷீஷீளீ), கட்செவி (கீலீணீtsணீஜீஜீs), சுட்டுரை (ஜிஷ்வீttமீக்ஷீ), வலைத்தளம் (மிஸீtமீக்ஷீஸீமீt) போன்றவற்றை பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் நன்கு கையாள வேண்டும். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படி நமது இயக்கத்தினைப் பற்றிய விமர்சனப் பதிவுகளுக்கு நமது எதிர்ப்பினை நாகரீகமாகவும், ஆதாரங்களோடும் ஆணித்தர மாகவும் விளக்கமளிக்க வேண்டும். அதற்கான இணைய பயிற்சி முகாம்களை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடத்திட வேண்டுமெனத் தீர்மானிக்கப்படுகிறது.

ள இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பகுத்தறிவாளர் கள் கொல்லப்படுவது இந்த ஆட்சியில் தொடர்கின்றது. மராட் டியப் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை, தண்டிக்கப்படவில்லை; நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி போன்றவர்களின் படு கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிகளுக்கு மாறாக கட்டிடங்கள் கட்டும் கார்பரேட் சாமியார்களின் நிகழ்ச்சிகளில் பிரதமர், முதல்வர், ஆளுநர் போன்றவர்கள் கலந்துகொள்வது நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். “ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியார்கள் ஜாக்கிரதை”  எனத் திராவிடர் கழகம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பிரச் சாரம் செய்துவருகின்றது. ஆட்சியாளர்களின் உதவியோடு வலம் வரும் கார்பரேட் சாமியார்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திட கருத்தரங்குகள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

ள அரசு அலுவலங்களில் கடவுளர் படங்களை வைப்பதும், போலீஸ் உடுப்போடு சாமியாடுவதும் தீ மிதிப்பதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. அவர்கள் மீது சட்டப்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள தமிழக அரசின் பாடத்திட்டங்களில் உள்ள மூட நம் பிக்கை சார்ந்த பாடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. பெண் உரிமை சார்ந்த பாடங்களை பாடத்திட்டங்களில் சேர்க்கவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள அறிவியல் கண்டுபிடிப்புக்களான ஊடகங்கள், பேய்-பிசாசு, பாம்பு பெண் போன்ற தொடர்களையும், ஜோதிடம் போன்ற அறிவியலுக்குப்  புறம்பான கருத்துகளையும் பரப் புவதை நிறுத்தவேண்டும் எனக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள கர்நாடக அரசு போல மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத் தினை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென  இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ள ஜெர்மனி மாநாடு: ஜெர்மனி நாட்டு கொலோன் பல் கலைக்கழகத்தில் ஜூலை 27, 28 மற்றும் 29, 2017 ஆகிய மூன்று நாள் பன்னாட்டு பெரியாரியல் சுயமரியாதை இயக்க மாநாடு (மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீஸீயீமீக்ஷீமீஸீநீமீ ஷீஸீ றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ஷிமீறீயீ-ஸிமீsஜீமீநீt விஷீஸ்மீனீமீஸீt) நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள், நாத்தி கர்கள், மதச் சார்பற்ற சுதந்திர சிந்தனையாளர்கள் என பல தரப்பினரும் அமைப்பு ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து தோழர்கள் பலரும் பன்னாட்டு மாநாட்டில் பங்கேற்றிடவும், உலக அளவில் முதன் முறையாக சுயமரி யாதை இயக்க மாநாடு நடைபெற உள்ளதை பரந்த அளவில் பரப்புர செய்திடவும் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

தீர்மானங்களை புலவர் இரா.சாமிநாதன் (திண்டிவனம்), அ.தா.சண்முக சுந்தரம் (தாம்பரம்) ஆகியோர் முன்மொழிய அனைவரும் கரவொலி எழுப்பி வழி மொழிந்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் கோவி.கோபால் வரவேற்புரை ஆற்றிட நிறைவாக வடசென்னை ஆ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

பங்கேற்ற பொறுப்பாளர்கள்

மற்றும் தோழர்கள்:

விழுப்புரம் மாவட்ட செயலாளர் வே.ரகுநாதன், லால்குடி பொருளாளர் வீ.சுப்ரமணியன், புதுச்சேரி மாவட்ட துணைத் தலைவர் கு.ரஞ்சித்குமார், புள்ளம்பாடி எஸ்.பொற்செழியன், கோபி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் அ.குப்புசாமி, திருவள்ளூர் கே.தேசன், ஆவடி மாவட்டம் ஆ.வெ.நடராசன், கூடுவாஞ்சேரி மா.இராசு, வடசென்னை மாவட்ட செயலாளர் பா.இராமு, திண்டிவனம் மாவட்ட செயலாளர் சா.மாரிமுத்து, மறைமலை நகர் தலைவர் மு.பிச்சைமுத்து, வேலூர் ச.பாஸ்கரன், விருகம்பாக்கம் மரு.வேல்துரை, சென்னை கோ.கண்ணன், ஆத்தூர் ச.வினோத்குமார், ஆத்தூர் ப.கோபிநாத், ஆத்தூர் மாவட்ட அமைப்பாளர் அ.அறிவுச் செல்வம், சேலம் கூ.செல்வம், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பொ.இராஜி, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ச.அழகிரி,  தஞ்சை மாவட்டம் விடுதலை வாசகர் வட்ட தலைவர் த.வெற்றிவேந்தன், சேலம் இரா.கண்ணன், ஆவடி மாவட்ட செயலாளர் வே.பன்னீர் செல்வம், ஒரத்தநாடு பூவை.முருகேசன், தென் சென்னை மாவட்ட செயலாளர் பேராசிரியர் எஸ்.அருட்செல்வன், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மு.இரா.மாணிக்கம், தென் சென்னை கி.வினோத்குமார், இராச பாளையம் மாவட்ட மேனாள் செயலாளர் அ.போ.கங்காதரன், கும்மிடிப்பூண்டி அமைப்பாளர் வி.ராஜபோஸ், புழல் பிரேம் குமார், திருவண்ணாமலை பா.வெங்கட்ராமன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.சிவக்குமார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்.

 

பகுத்தறிவாளர் கழகப்

பொறுப்பாளர்கள்

தலைமையிடம்

மாநில துணைச் செயலாளர்:

ஆ.வெங்கடேசன்

கும்முடிப்பூண்டி மாவட்டம்

தலைவர்: டி.இருதயராஜ்,

செயலாளர்: பாஸ்கரன்

தருமபுரி மாவட்டம்

தலைவர்: கதிர்.செந்தில்குமார்

துணைத் தலைவர்: இர.கிருட்டிணமூர்த்தி

செயலாளர்: மாரி.கருணாநிதி

திருவள்ளூர் மாவட்டம்

தலைவர்: கி.எழில்

செயலாளர்: ந.அறிவுச்செல்வன்

திருவண்ணாமலை மாவட்டம்

தலைவர்: பா.வெங்கட்ராமன்

 -விடுதலை,11.3.17