பக்கங்கள்

திங்கள், 24 ஜூலை, 2017

Periyar revolution-The Week, 22.3.1992,


The Tanjore experience of 1971-72 also brought home the point that political support can work wonders. In a bid to raise contraceptive acceptance and to popularise the small family norm, the district administration, with the help of the rural development and agriculture department, organised functions and colourful processions. In all these, the political leaders were in the forefront.


The state had infact benefited from an awareness movement set in motion by the social reformer Periyar Ramaswamy Naicker in the mid-20s. Shocking a caste-ridden society, which he revelled in doing, he had ridiculed the concept of a woman being just a child-bearing machine. He spoke powerfully for contraception, status of women and late marriage. Poet-patriot Bharatidasan at about the same time wrote poems on prevention of un-wanted pregnancies and the need to check population growth. This was long before family planning programmes were even thought of.

Rashmi Saksena, The Week, 22.3.1992,

தஞ்சாவூரில் 1971-1972 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அளவான குடும்பம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களால் மக்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஒரு அக்கறை ஏற்படத் துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை மற்றும் இதர துறையினரும் உள்ளூர்அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை பிரச்சாரமாக செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் இது போன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால், தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நீண்ட காலத்திற்கு முன்பே மக்களிடையே கொண்டு செல்லப்பட்டது. சமூகப் புரட்சியாளரான பெரியார் ராமசாமி நாயக்கர் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர், இவர் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் சுதந்திரமே சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று உணர்ந்தவர். தன்னுடைய எழுத்துக்களில் பெண்கள் வெறும் குழந்தை பெறும் கருவியாக இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் பெண்கள் தங்களின் சமூக பொருளாதார நிலையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்றதுடன் திருமணம் குழந்தைபெறுவதை பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உறுதியுடன் கூறினார்.  

அதேபோல் பெரியார் வழிவந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய கவிதைகளில் மக்கள் தொகை அதிகரிக்கப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து எழுதிவந்தார். இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு 30 ஆண்டுகள் வரை மக்கள் தொகைப் பிரச்சினையை தீர்க்க தீர்வுகளைத் தேடிக்கொண்டு இருக்கும் போது தென் இந்தியாவில் நீண்டகாலத்திற்கு முன்பே மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்.   

இந்தியாவின் மக்கள் தொகை குறித்த பிரச்சாரம் தொடர்பாக ‘‘தி வீக்'' என்ற ஆங்கில நாளிதழில் அதன் பொறுப்பாசிரியர் ரேஷ்மி சக்சேனா மார்ச் 22, 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தி வீக் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையின் ஒருபகுதியின் தமிழாக்கமே இது).

-விடுதலை,24.7.17,-viduthalai,24.7.17