பக்கங்கள்

செவ்வாய், 6 ஜூன், 2017

Those days of our youth-DRAVIDIAN KAZHAGAM PRESIDENT

Those days of our youth

My relationship with DMK president M Karunanidhi goes back 70 years, when we were students. During summer holidays we used to join Periyar’s training school in Erode and once, after a function, we stayed over at a member’s house in a village near Thiruthuraipoondi, in undivided Thanjavur district. We were both tired but mosquitoes kept Karunanidhi awake, while I slept through it. Around 1am, he woke me up and said he wanted to leave for the next stop Thiruthuraipoondi.In the dead of the night, we found an open bullock cart and along with two others set off. We reached our friend’s house in Thiruthuraipoondi at 3am. But not wanting to wake him up, slept on the sitouts. In the morning when the householders found us on the sit-outs they were astonished. Another time he attended a Periyar conference near Trichy when he had small pox.

K Veeramani | DRAVIDIAN KAZHAGAM PRESIDENT

-viduthalai,3.6.17

கலைஞருடன் மாட்டுவண்டியில் கும்மிருட்டில் பயணம் திராவிடர் கழகத் தலைவர் தகவல்



கலைஞர் குறித்து நீளும் நினைவுகளை அவருக்கு நெருக்கமானவர்கள் பகிர்ந்து கொள்வதை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலைஞருடன் உள்ள இளமைக்கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அந்த இளமைக்காலங்களில்....

திமுக தலைவர் கலைஞருடனான நட்பில் நினைவலைகள் 70 ஆண்டுகள் பின்னால் செல்கின்றன.

கோடைக்கால விடுமுறை நாள்களில் தந்தை பெரியார் குருகுலமான ஈரோட்டில் இணைந்திருப்போம். ஒருமுறை நிகழ்ச்சி முடிந்தபின்னர் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தொண்டர் ஒருவரின் வீட்டில் தங்கினோம். நாங்கள் மிகவும் களைப்பாக இருந்தோம். கொசுக்கள் கலைஞரைத் தூங்க விடவில்லை. கொசுக்கடிக்கிடையே நான் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டேன். நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் அவர் என்னை எழுப்பினார். நிகழ்ச்சி நடக்கக்கூடிய அடுத்த இடமாகிய திருத்துறைப்பூண்டிக்கு போகலாம் என்றார்.மேலும்இருவருடன்சேர்ந்துகும் மிருட்டில்திறந்தமாட்டுவண்டியில்சென் றோம். அதிகாலை 3 மணியளவில் திருத் துறைப்பூண்டியில் உள்ள நண்பரின் வீட்டை அடைந்தோம்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நண்பரை எழுப்ப விரும்பாமல் திண்ணையிலேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.

நாங்கள் திண்ணையிலேயே படுத்து தூங்கி யதை காலையில் எழுந்த அவ்வீட்டார் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திருத்துறைப்பூண்டியில்பெரியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அம்மை போட்ட நிலையிலேயே கலைஞர் கலந்துகொண்டார்.

இவ்வாறு இளமைக்கால நினைவு அலைகளை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி பகிர்ந்துகொண்டார்.