தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் உறுப்பினர்கள் பெரியார் திடலுக்கு வருகை
• Viduthalaiசென்னை, மே 13- தெலங்கானா மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் வி.கிருஷ்ண மோகன் ராவ், உறுப்பினர்கள் உபேந்திரா, சுப்ரபாத் படேல் நூலி, கே.கிஷோர் கவுட், சிறப்பு அதிகாரி டி.சீனிவாஸ் ரெட்டி,, தனி உதவியாளர்கள் ஜி.சதீஸ் குமார், என்.சீனிவாஸ் ராவ் ஆகியோர் இன்று (13.5.2022) பெரியார் திடலுக்கு வருகை தந்தனர்.
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், அவர்களை வரவேற்று, சால்வை அணி வித்து, தந்தை பெரியார் குறித்த ஆங்கில நூல்கள், மற்றும் 69 சதவீத இட ஒதுக்கீடு நூலை அளித்தார். பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
தந்தை பெரியார் அருங்காட்சியகம், நினைவிடம், நூலகம் ஆகிய இடங்களை சென்று பார்வையிட்டனர். சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள், சிந்தனைகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும், தமிழர் தலைவரின் தொய்வில்லா சமூகப் பணி குறித்தும் அறிந்து வியந்து போற்றினர்.
முன்னதாக, ஆணையத்தின் தலை வர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் துறை அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்து விவரங்கள் கேட்டறிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக