இராமன் 'கடவுள்' அவதாரமா? பேரறிஞர் அம்பேத்கரின் கருத்து
• Viduthalai“இராமனிடம் இருந்த உயர் நெறிகள் தான் அவனைக் 'கடவுள்' அவதாரமாக்கியது. ஆனால் இராமன் 'கடவுள்' ஆகும் தகுதிப் படைத்தவனா என்பது கேள்விக்குறியாகும். 'கடவுளாக' அவனைக் கருதி வழிப்படுகிறவர்கள் கீழ்க்கண்ட உண்மைகளை ஆய்வு செய்ய வேண்டும். இராமனின் பிறப்பு வியப்புக்குரியது. வெளிப்படையான உண்மையை மறைப்பதற்காக அவன் ‘ஷருங்Õ என்ற ஒரு முனிவர் உருவாக்கிய பிண்டத்திலிருந்து பிறந்தான் எனச் சொல்வதுண்டு. கணவன் மனைவியாக வாழா விட்டாலும் முனிவர் ஷருங்குக்கும், கவுசல்யைக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் இராமன். தோற்றத்தில் இந்தப் பிறப்பு மானக்கேடான தன்மையாக இருப் பினும், உறுதியாக இது இயற்கைக்குப் புறம்பானது.
இராமனின் பிறப்பு தொடர்புடைய நிகழ்வுகள் விரும்பத்தகாப் பண்புகளைக் கொண்டதாக இருந் தாலும், அவற்றை மறுப்பது கடினமானது. இராமனு டைய பிறப்பு இவ்வாறாகப் பொதுவாக ஒழுக்கக் கேடானதாகக் கருதாவிட்டாலும் இராமனுக்குத் துணையாகயிருப்பதற்காக உருவாக்கப்பட்டவர்களின் பிறப்பு ஒழுங்கீனமானதே.
இராமன் ஒரு மனைவியோடு வாழ்ந்த நெறி யாளன் எனச் சொல்லப்படுவதுண்டு. எப்படி இது பொதுவான கருத்தியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. உண்மையில் இதற்கு அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லை. வால்மீகி கூட இராமனுக்குப் பல மனைவிகள் உண்டு என்கிறார். இவர்களைத் தவிரப் பல வைப்பாட்டிகளும் உண்டு. இவ்வகையில் இராம னுக்குப் பெயரளவிற்குத் தந்தையான தசரதனுக்கு உண்மையில் மூன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளும் பல வைப்பாட்டிகளும் உண்டு”.
(It is because of his virtues that Rama has come to be deified. But is Rama a worthy personality of deification. Let those who accept him an object worthy of worship as a God consider the following facts.
Rama's birth is miraculous and it may be that the suggestion that he was born from a pinda prepared by the sage Shrung is an allegorical glass to cover the naked truth that he was begotten upon Kausalya by the Sage Shrung although the two did not stand in the relationship of husband and wife.
In any case, his birth if not disreputable in its origin is certainly unnatural. There are other incidents connected with the birth of Rama the unsavory character of which it will be difficult to deny....
Rama's birth is thus accompanied by general debauchery if not in his case in the case of his associates. ....
One of the virtues ascribed to Rama is that he was monogamous.
It is difficult to understand how such a notion could have become common.
For it has no foundation in fact.
Even Valmiki refers to the many wives of Rama.
These were of course in addition to his many concubines.
In this, he was the true son of his nominal father Dasaratha who had not only the three wives referred to above but many others."-
(Riddles in Hinduism - Babasaheb Ambedkar Writings and Speeches - Volume 4- pages-324-335.)
இராமன் மது அருந்துவாரா?
"ராமன் அந்தப்புரத்தில் இருக்கும் போது எவ் வகையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதையும் வால்மீகி விளக்கமாகச் சுட்டியுள்ளார்.
அசோக வனத்திலிருந்த பூங்காவில் தான் அந்தப் புரம் அமைந்திருந்தது. அங்கு தான் இராமன் உணவு உண்பார். இராமன் சுவைத்து உண்ட அனைத்து வகை உணவுப் பொருட்களையும் வால்மீகி குறிப் பிட்டுள்ளார். மது, மாமிசம், பழங்கள் இவற்றில் அடங்கும். இராமன் மது அருந்தாதவர் அல்ல. இராமன் அதிக அளவில் மது அருந்துவார். சீதையும் மது அருந்தும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பார். மதுக் குடிக்கும் களியாட்டத்தில் சீதையும் இணைந்து இருப்பார் என வால்மீகி பதிவிட்டுள்ளார்.
அப்ஸரஸ், உரகா, கின்னரி போன்ற அழகிகளும் ஆடல், பாடல்களில் ஈடுபடுவார்கள். பல பகுதிகளி லிருந்து கொண்டு வரப்பட்ட அழகான பெண்களும் இதில் அடங்குவர். குடியாட்டம் போடும் பெண்கள் நடுவில் இராமன் உட்கார்ந்து இருப்பார். அவர்கள் மகிழ்விப்பார்கள். இராமன் அந்தப் பெண்களுக்கு மாலை சூட்டுவார். பெண்களின் இளவரசர் இராமன் என வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல.
இது தான் ராமனின் வாழ்க்கை முறை.
" Valmiki also gives a detailed description how Rama spent his life in Zenana.
This Zenana was housed in a park called Ashoka Vana.
There Rama used to take his meal.
The food according to Valmiki consisted of all kinds of delicious viands.
They included flesh and fruits and liquor.
Rama was not a teetotaller .
He drank liquor copiously and Valmiki records that Rama saw to it that Sita joined with him in his drinking bouts....
There were Apsaras,Uraga and Kinnari accomplished in dancing and singing.
There were other beautiful women brought from different parts.
Rama sat in the midst of these women drinking and dancing.
They pleased Rama and Rama garlanded them.
Valmiki calls Rama as Prince among women's men.
This is not a day's affairs.
It was a regular course of his life."
(Riddles in Hinduism- Dr.Babasheb Ambedkar Writings and Speeches- volume- 4- page 331-)
இவ்வாறு 'கடவுள்' அவதாரமாக சங்கிகளால் திணிக்கப்படும் இராமன் பற்றிய உண்மைகளை அண்ணல் அம்பேத்கர் அடுக்கடுக்கான ஆதாரங் களை முன் வைத்து ‘இந்து மதத்தின் புதிர்கள்’; என்ற நூலில் ‘இராமனின் ஒழுக்கக் கேடுகளைப் பட்டிய லிட்டு அம்பலப்படுத்துகிறார்.
ஜாதியத்தை வீழ்த்தி சனாதனத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தியவர் பேரறிஞர் அம்பேத்கர்.
இமாலய புராணப் பொய்களை, கட்டியமைக்கப் பட்ட மதவாத சதி கிடங்கைத் தனது அறிவால், ஆற்றலால், ஆளுமையால் வெடித்துச் சிதற வைத் தவர் அண்ணல் அம்பேத்கர்.
இராமனைப் புனிதனாக்கிப் பொய்யையே மூலதனமாக்கி ஏமாற்று அரசியல் செய்ய வந்த கூட்டம் கூறும் வடிகட்டிய பொய்களை நூலாக வடித்து வடக்கு வாலாட்டுகிறது. இதற்குத் துணை போவது - தமிழ் மண் போற்றும் மதச்சார்பற்ற மானுட நெறிகளுக்கு எதிரானது. அண்ணல் அம்பேத்கர் போற்றிய கருத்தியலுக்கு முற்றிலும் எதிரானது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு உச்ச நட்சத்திர நடிகரை உடல் நலம் சரியில்லை எனத் திரும்பத் திரும்பக் கூறியும் சனாதன சங்கிகள் அவரைப் படுத்தியப்பாட்டை நாடே அறியும். கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது.
"யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே, அட
அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே
இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே
மூடருக்கும் மனிதர் போல
முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம்
நிறைந்திருக்கும்டா
காலம் மாறும் வேஷம் கலையும்
உண்மை வெல்லுமடா"
என்ன மிரட்டலோ! என்ன பயமோ!
ஆட்சி மாறினால் உண்மை தெரியும்.
சர்வாதிகார ஆட்சிகள் சாய்ந்தது தானே அரசியல் வரலாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக