பகுத்தறிவு, நாத்திகம், மனிதநேயம் ஆகியவற்றுக்காக வெளிவரக்கூடிய ஒரே ஆங்கில ஏடு ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’
ஆங்கில மாத இதழ் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ தொடக்கவிழாவில் தமிழர் தலைவர்
சென்னை, அக்.18_ சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (17.10.2015) மாலை தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டாக்டர் எஸ்.டி.இரத்தினசபாபதி தலைமையில் ஆங்கில மாத இதழ் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ தொடக்கவிழா நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் வரவேற்றார். தொடக்க விழாவில் பேசிய அனைவர் உரையும் ஆங்கிலத்தில் அமைந்தது.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ’அபாயத்துக்குள்ளாகியுள்ள குடிமக்களின் உரிமைகள், கருத்து சுதந்திரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
1971 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் தொடங் கப்பட்ட ஆங்கில மாத இதழ் ’தி மாடர்ன் ரேஷன லிஸ்ட்’ இதழ் ஆங்கிலத்தில் பகுத்தறிவு பரப்பும் பணியை இடையறாது செயல்படுத்தி வருகிறது. ’ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம்’ எனும் அமைப்பு தொடக்க விழாவில், வாசகர் கருத்து பரிமாற்றம் மற்றும் விவாதத்தை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் ஒருங் கிணைத்தார்.
மேலும், ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ அக்டோபர் மாத இதழைத் திறனாய்வு செய்து விரிவாகப் பேசினார்.
கருத்துப் பரிமாற்றம் மற்றும் விவாதத்தில் பங்கேற்ற வாசகர்களின் கருத்துகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விரிவாக பதிலுரைத்தார்.
மானமிகு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Self-Respectful’ எனும் சொல்லை பலத்த கரவொலிக் கிடையே அறிமுகப்படுத்தினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழின் முதன்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது,
பகுத்தறிவு, நாத்திகம், மனிதநேயம் ஆகியவற்றுக் காக வெளிவரக்கூடிய ஒரே ஆங்கில ஏடு ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்று உள்ளது. இதில் பெருமைப் படவில்லை.
நம்முடைய அறிவு ஆசான் தந்தை பெரியார் தென்கிழக்காசியாவின் சாக்ரட்டீஸ், புத்துலகின் தொலைநோக்காளர் அவர்கள் சுய மரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு ஆகியவைகளை பரப்புவதற்காக 87 ஆண்டுகளுக்கு முன்பாக நாமெல்லாம் பிறக்காத 1928 ஆம் ஆண்டில் ‘ரிவோல்ட்’ என்கிற ஆங்கில ஏட்டைத் தொடங் கினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் முழுமையாக எதையும் பயன்படுத்திக் கொள்பவர்; அந்த வகையில் ஆங்கில ஏடான ‘ரிவோல்ட்’ மூலமாக சுயமரியாதை, பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்குப் பயன் படுத்திக்கொண்டார்.
’ஸ்பெல் செக்’ போன்ற வசதிகள்
அப்போது கிடையாது
கடைசிவரை பகுத்தறிவுவாதியாக இருந்தவரான எஸ்.ராமநாதன் அவர்கள் ருஷ்யப் பயணத்தின்போது தந்தை பெரியாருடன் சென்றவர். அவர் ‘ரிவோல்ட்’ ஏட்டில் பணியாற்றினார். அடுத்து குத்தூசி குருசாமி பணியாற்றினார். படித்தவர்கள் எல்லாம் அயோக் கியர்களாக இருந்தார்கள். படிப்பறிவில்லாதவர்கள் சொக்கத்தங்கமாக இருந்தார்கள். தந்தை பெரியார் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்கள்.
இப்போதுள்ள ’ஸ்பெல் செக்’ போன்ற வசதிகள் அப்போது கிடை யாது. எழுத்து கோர்ப்பவர்கள், பிழை திருத்து வோருக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, ‘ரிவோல்ட்’ ஏட்டினை வாசிப்பவர்கள் படித்த அறிவாளிகள், எழுத்தில் பிழை இருந்தால், திருத்திப் படித்துக்கொள்வார்கள் என்றார். இப்போது அப்படி இருக்க முடியாது.
பழைமைவாய்ந்த தேசிய கலாச்சாரம் என்றெல் லாம் கூறத் தொடங்கிவிட்டார்கள். ராமன் எந்த ஆங்கிலவழிப் பள்ளிக்கும் சென்றவன் அல்ல. ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘ஆர்கனைசரில்’ ’சித்தரிக்கப் படும் பகுத்தறிவுவாதம்’ என்றெல்லாம் குறிப்பிட்டு, பகுத்தறிவு என்பது எப்போதும் உள்ளது என்றெல் லாம் பகுத்தறிவு குறித்து எழுதத் தொடங்கிவிட் டார்கள்.
இரக்கத்தைத் தெரிவிக்காத ‘ஆர்கனைசர்’ ஏடு நீதி, நியாயத்துக்குப் புறம்பாக கல்புர்கி கொல்லப்பட்டதை ஆதரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘ஆர்கனைசரில்’ டாக்டர் அரிசங்கர் என்கிற கல்வியாளரைக் கொண்டு பகுத்தறிவு வாதங்களைத் திரித்து, திசை திருப்பி, முற்றிலும் பகுத்தறிவுக்கு புறம்பாக எழுதியுள்ளது. மெட்டீரியலிசம் என்பதி லேயே பாரதீய மெட்டீரியலிசம் என்று கூறுகிறார்கள்.
தந்தை பெரியார் மெட்டீரியலிசம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டு நூலை வெளியிட்டுள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய நூல் அது.
சம்பூகனை ராமன் கொன்றதை யார் ஏற்பார்கள்? உத்தரகாண்டத்தில் சம்பூகவதம்குறித்து குறிப்பிட் டுள்ளார்கள். மண்டல் குழு அறிக்கையிலேயே சம்பூகன் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள்.
நீதிபதி சின்னப்ப ரெட்டி அவருடைய தீர்ப்புரை யில் குறிப்பிடும்போது, ஏகலைவன், துரோணர் காலம் முடிந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
பகுத்தறிவு என்பது பாரதத்தின் பழைமையானது என்று குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள்.
திருக்குறளை, பகுத்தறிவை நாம் அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத, ஜாதி வேறுபாடுகள், மூடநம்பிக்கைகளை எதிர்த்தவரான கவுதம புத்தரையே 9 ஆவது அவதாரம் என்று கூறுகிறார்கள்.
ராமன் கதாபாத்திரங்கள் குறித்து தந்தை பெரியார் நூல் எழுதி வெளியிட்டபோது, இலட்சக்கணக் கிலான பிரதிகள் விற்பனையாகி பரவியபோது, ‘கல்கி’யில் ராஜகோபாலாச்சாரியார் ’சக்கரவர்த்தி திருமகன்’ என்று தொடர் எழுதி, பின்னர் நூலாக வெளியாகி அந்த நூலும் ஏராளமாக விற்பனை ஆனது.
அவர் அந்த நூலில் குறிப்பிடும்போது, ராமன் ஏன் நேரிடையாக வாலியை கொல்லாமல் மறைந் திருந்து கொன்றான்? என்று கூறி, இதில் வாலி வதம்குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்பதால் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அதை அப்படியே விட்டுவிட்டார்.
ராமனைப் போலவே, ராஜபக்சேவும். அவர்கள் செய்த கொலை களை யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது. பெண் கேலிவதை என்றால் முதல் குற்றவாளி கிருஷ்ணன் தான்.
பகுத்தறிவைப் பரப்புவதில்தான்...
அமெரிக்கப் பேராசிரியர் ஜோஷி குறிப்பிட் டுள்ளவாறு, நம்முடைய எதிரிகள் முதலில் பாராட் டுவார்கள், பின்னர் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, பின்னர் முழுமையாக செரிமானம் செய்து அழித்து விடுவார்கள். அதுபோன்று திருக்குறளை காப் பாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது பகுத்தறிவு (ரேஷனலிசம்) என்பதையும் காப்பாற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்த முனைந்துள்ளார்கள்.
பகுத்தறிவைப் பரப்புவதில்தான் நம்முடைய இதழான ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ பணியாற்றி வருகிறது.
அண்ணா பகுத்தறிவு குறித்து அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பேசுகையில் சுருக்கமாகக் கூறும்போது, சொல் வேறு; செயல் வேறு என்கிற இரட்டை நிலை இல்லாததுதான் பகுத்தறிவு என்று குறிப்பிட்டார். பகுத்தறிவு என்பது அறிவியலைப் புறந்தள்ளாததும், உண்மைக்கானதுமாகும்.
பெண்களுக்கு சம உரிமை, ஜாதிபாகுபாடுகள் களையப்பட வேண்டும். மனிதன் ஒரு சமூக விலங்கு.
பல நாடுகளிலும் வலியுறுத்தப்படுவது கருத்து சுதந்திரம்.
நம்முடைய அரசமைப்பு முகப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (LIBERTY, EQUALITY, FRATERNITY)வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதவாதிகள் கேள்வி கேட்பதை அனுமதிக்கமாட் டார்கள். பகுத்தறிவுவாதிகள் எதையும் ஏன்? என்று கேட்பவர்கள். அறிவியல் என்பதே எப்போதும் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியது. மனித உறவுகளை அழிக்கக்கூறுவது கீதை.
இதைக் கேட்டால், பகவான் அருளியது கீதை என்கிறார்கள். ஆகவே, ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ வாசகர் வட்டத்தில் பார்வையும், பணியும் மிகவும் முக்கியமானது. ஆங்கிலம் அறிந்த அனைவருக்கும் இச்செய்தியை கொண்டு செல்லவேண்டும். படிக்க வேண்டியது எது? படிக்கக்கூடாதது எது? என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
இவ் வாறு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ முதன்மை ஆசிரியர் பேசுகையில் குறிப்பிட்டார். அவர் உரையைத் தொடர்ந்து வாசகர்களுடன் கருத்து பரிமாற்றம், விவாதக்களம் நடைபெற்றது.
மருத்துவர் தேனருவி கேள்வியாக சமூக வலைத்தளங்களில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பும்போது ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ கருத்துகள் தமிழ் தெரியாதவர்களுக்கும் பயன்படுகிறது. இந்தியில் இதழ் வெளிவருமா? என்று கேட்டார்.
ஆசிரியர் பதிலுரையில் பெரியார் மணியம்மை பல்லைக்கழகத்தின் சார்பில் மொழிபெயர்ப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழில் சில பக்கங்களில் இந்தியும் இணைந்து வர உள்ளது. ந.கதிரவன் கேள்வியாக மாண வர்களை கவர்ந்திடும்வண்ணம் ‘தி மாடர்ன் ரேஷன லிஸ்ட்’ இதழில் உரையாடல் பகுதி இடம் பெறுமா? என்று கேட்டார்.
ஆசிரியர் பதிலுரையில் மேலும் பல உள்ளடக் கங்களுடன் இதழ் வெளிவரும் என்று குறிப்பிட்டார்.
ஒரு நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ள வரான திருவேங்கடம் கேள்வியாக தந்தை பெரியார் ஆங்கிலத்தல் பேசியுள்ளாரா? என்று கேட்டார்.
ஆசிரியர் பதிலுரையில், தந்தை பெரியார் வட மாநில சுற்றுப் பயணங்களில் தந்தை பெரியாரின் செயலாளராக நான் உடன் சென்றேன். கான்பூர், லக்னோ பல்கலைக்கழகத்தில் ஏராளமானவர்கள் முன்னிலையில் தந்தை பெரியார் ஆங்கிலத்தில் பேசினார். முதலில் அவர் தமிழில் பேசி, நான் ஆங்கிலத்தில் கூறி, பின்னர் மூன்றாவது நபர் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறிய நிலையில், தந்தை பெரியார் குற்றால அருவிபோல் பேசுபவர்.
ஆகவே, அவருக்கு சிரமமாக இருந்ததை அடுத்து, அவரே ஆங்கிலத்தில் பேச அடுத்தவர் இந்தியில் மொழி பெயர்த்தார். 1957_1958 ஆம் ஆண்டில் லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தந்தை பெரியார் பேசினார்.
வித்தவுட் எனி ரீசன் என்பதற்குனு தமிழில் என்ன என்று தந்தை பெரியார் கேட்ட போது எவ்வித ஒதுக்கீடும் இல்லாமல் என்று கூறியபோது, அவர் ஆங்கிலத்திலேயே வித்தவுட் எனி ரீசன் என்றே பேசினார்.
அண்ணா தம் மும்பை அனுபவத்தை அழகாக தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தபோது எங்களிடம் குறிப்பிட்ட சம்பவம் மிகவும் சுவாரசிய மானது. மும்பையில் எம்.என்ராய் அவருடைய இல்லத்தில் விருந்து.
அப்போது தந்தை பெரியாருக்கு தயிர் சோறு, ஊறுகாய் வைக்கப்பட்டிருந்தபோது, தயிர் சோற்றைவிட ஊறுகாய் அவரைக் கவர்ந்திருந்தது. ஊறுகாய் மேலும் வேண்டும் என்று கேட்கவேண்டிய பெரியாருக்கு ஊறுகாய் என்பதற்கு ஆங்கிலத்தில் பிக்கிள்ஸ் என்பது உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
அண்ணா இதைக்கண்டு எப்படி சமாளிக்கிறார் பார்ப் போம் என்று அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார். எம்.என்.ராய் என்ன வேண்டும் நாயக்கர்? என்று மிகுந்த அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். இவர் ஊறுகாய் வைத்திருந்த இடத்தைக்காட்டினாலும், அவருக்கு புரியவில்லை. மிகவும் தவித்துப்போனவர், தன்னுடைய நாக்கால் டொக்,டொக் என்று சுவை உணர்வை காட்டியபோது, ஓ, பிக்கிள்ஸ் என்று எடுத்து வந்து கொடுத்தார்கள்.
இச்சம்பவத்தை அண்£ கூறும்போது ஒரே கலகலப் பாக இருக்கும். என்று ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்ட போது, அன்னை மணியம்மையார் அரங்கமே கலகலப் பானது. தந்தை பெரியாரைப்பொறுத்தமட்டில் மொழி ஒரு தொடர்புக்கான கருவியே ஆகும் என்று ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தன்னு டைய கோரிக்கையாக மாணவர்கள், இளைஞர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரடியாக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்¢வு வேண்டும் என்று கோரினார்.
கலந்துகொண்டவர்கள்
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் நேரு, பச்சையப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் அரங்கசாமி, வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.வி.கோபால், தமிழ்லெமுரியா இத ழாசிரியர் குமணராசன், மு.தருமராசன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னரெசு பெரியார், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், பொருளாளர் மனோகரன்,
பெரம்பூர் ஆசிரியர் சூரியன், பா.மணியம்மை, கொடுங்கையூர் தங்கமணி, தங்க. தனலட்சுமி, மருத்துவர் தேனருவி, பேராசிரியர் இசையமுது, சி.வெற்றிசெல்வி, ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ராமதுரை, உடுமலை வடிவேல், வழக்குரைஞர் உத்திரக்குமார்,
மாணிக்கம், சேரலாதன், தாம்பரம் மாவட்டத் துணைத் தலைவர் விஜய் ஆனந்த், கலைச்செல்வன் மற்றும் அண்ணா பல் கலைக்கழக மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் அருள்செல்வன் நன்றி கூறினார்.
vidutalai,18.10.15